Mood:
ஏதோ ஒரு பிறவியில்
எப்படியோ தவம் செய்திருக்கிறேன்,
இந்த பிறவியில் உன்னை
இனிய தோழியாக பெற்றதற்கு...
பாசம் என்பதை தேடி
பலமுறை ஏமாந்திருக்கிறேன்,
வேசமான பொய் அன்பில்
வெறுமனே மூழ்கி களைத்திருக்கிறேன்.
நிறை வான அன்பினால்
னீயும் அடிமை செய்திட்டாய்
மண நாள் பரிசாக என்ன தரலாம் என்று
மனதினுள் யூகித்து நின்றேன்
இறுதியில் இப்படி வேண்டி நின்றேன்
இறைவனிடம்...
என் ஆயுளில் பாதியை பரிசாக தரசொல்லி!
இலவசமாக கேட்டு இருந்தால்
இல்லையென்று கூறி இருப்பான்,
என்னிடமிருந்து உனக்கு தர
எவனிடம் கேட்க வேண்டும்
இதையே மண நாள் பரிசாக பெற்று கொள்ளேன்...
Posted by thiruvilaiyattam
at 5:36 PM